PAMBATTI SIDDHAR

image

மருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலை மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன்
பெரிய பாக்யசாலி என்றும் சிலர் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று
பாம்பைத் தீவிரமாகத் தேடினார்.
அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர் தோன்றினார். இங்கு எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான்
நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன் அதைக் காணவில்லை” என்றார்.
இதைக் கேட்ட சட்டமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா!
மிகுந்த உல்லாசத்தைத் தரக் கூடிய ஒரு பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு; ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும்
இந்த பாம்பை விட்டுவிடு. உன் உடலில் இருக்கும் அந்த பாம்பை அறியும் வழிதேடு. இல்லாத பாம்பைத்தேடி ஓடாதே என்று சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
சித்தர் கனிவோடு அவரைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு
படுத்துக்கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். தூங்கிக் கொண்டிருக்கும். அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை
அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப் பாம்பின் உறக்கம் தான்.
இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும், அதனால் தியானம்
சித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே என்று சொல்லி முடித்தார் சட்டைமுனி.
“குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்”! என்று சொன்ன
பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.
பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது.
ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் யோசித்தார்.
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.
அரசன் எழுந்தான் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை.
மக்களின் விமர்சனம் காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள். அவள் மனதில் சந்தேகப் புயல் மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.
அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள் கேட்கத் தொடங்கினாள் ராணி.
“ஐயா! தாங்கள் யார்ப எங்கள் அரசராப அல்லது சித்து வித்தைகள் புரியும் யாரேனும் மகானாப என்று கேட்டாள்.
அரசி! உனக்கு உண்மைபுரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப் போக்குவதற்காகவே நான்
மன் னனது உடலில் புகுந்திருக்கிறேன். என்னுடைய பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்றார். அரசி உண்மையை உணர்ந்தாள் கைகளைக் கூப்பி
எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
கடைத்தேறும் வழியை உபதேசியுங்கள் என்று வேண்டினாள்.
அரசரிடமிருந்து பலப் பல தத்துவப் பாடல்கள் உபதேச மாக வந்தன. அவைகளைக் கவனமாக அனைவரும் கேட்டனர்.
அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேறினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது.
சித்தர் உபதேசப்படி ராணி அந் நாட்டை ஆளத் தொடங்கினாள்.
அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் பாம்பாட்டி உடலில் புகுந்தார்.
(இவர் தவம் செய்த குகை மருதமலை யில் இருக்கிறது. இவர் மருதமலை யில் சித்திய டைந்ததாகச் சிலரும், துவாரகை யில் சித்தியடைந் ததாகச்
சிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.
மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.)
பாம்பாட்டி சித்தர்.                                   

image

Above picture is pambatti siddhar padham.it is in virudhakiriswarar temple located at virudhachalam.

Pambatti siddhar jeeva samadhi is at sankarankovil.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s