PAMBATTI SIDDHAR

image

மருத மலைமீது பெரிய நவரத்ன பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதன் தலையில் விலை மிகுந்த மாணிக்கம் இருப்பதாகவும், அதனைப் பிடிப்பவன்
பெரிய பாக்யசாலி என்றும் சிலர் பேசிச் சென்றனர். இதனைக் கேள்விப்பட்ட பாம்பாட்டி சித்தர் அதனைப் பிடிக்க விரும்பி காட்டிற்குள் சென்று
பாம்பைத் தீவிரமாகத் தேடினார்.
அப்போது திடீரென்று அங்கே சட்டைமுனி சித்தர் தோன்றினார். இங்கு எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பாம்பாட்டி சித்தர் “நான்
நவரத்ன பாம்பைப் பிடிக்க வந்தேன் அதைக் காணவில்லை” என்றார்.
இதைக் கேட்ட சட்டமுனி சிரித்தார். நவரத்ன பாம்பை நீயே உனக்குள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே! இது பயனற்ற செயலல்லவா!
மிகுந்த உல்லாசத்தைத் தரக் கூடிய ஒரு பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு; ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளியில் திரியும்
இந்த பாம்பை விட்டுவிடு. உன் உடலில் இருக்கும் அந்த பாம்பை அறியும் வழிதேடு. இல்லாத பாம்பைத்தேடி ஓடாதே என்று சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம்பாட்டியார் சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.
சித்தர் கனிவோடு அவரைப் பார்த்து விளக்கமளிக்கத் தொடங்கினார். அற்புதமான இந்த மனித சரீரத்தினுள் ஆதியிலிருந்தே ஒரு பாம்பு
படுத்துக்கொண்டிருக்கிறது. குண்டலினி என்பது அதன் பெயர். தூங்கிக் கொண்டிருக்கும். அந்த பாம்பு அறிவை சுருக்குகிறது. இதன் நுட்பத்தை
அறிவது அரிது. மக்களின் துன்பத்திற்கு மூலாதாரமே இந்தப் பாம்பின் உறக்கம் தான்.
இறைவனை உணரப் பாடுபடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும். அப்பொழுது `குண்டலினி’ என்ற அந்தப் பாம்பு விழித்து எழும், அதனால் தியானம்
சித்தியாகும். இறைவன் நம்முள் வீற்றிருப்பார். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே என்று சொல்லி முடித்தார் சட்டைமுனி.
“குருதேவா! அரும்பெரும் இரகசியத்தை இன்று உங்களால் அறிந்தேன். மேலான இந்த வழியை விட்டு இனி நான் விலக மாட்டேன்”! என்று சொன்ன
பாம்பாட்டியார், சித்தரை வணங்கி எழுந்தார். சித்தர் அருள்புரிந்து விட்டு மறைந்தார்.
பாம்பாட்டியார் செய்த தொடர் யோக சாதனையால் குண்டலினி கை கூடியது. எல்லாவகை சித்துக்களும் சித்தியானது.
ஒருநாள் வான் வழியே உலா வந்து கொண்டிருந்த போது பாம்பாட்டி சித்தர் யோசித்தார்.
கூடுவிட்டு கூடுபாயும் வித்தையின் வாயிலாக பாம்பாட்டி சித்தர் இறந்து போன அரசனின் உடலில் புகுந்தார்.
அரசன் எழுந்தான் அனைவருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசன் பிழைத்துக் கொண்டாரே தவிர அவர் செய்கைகள் ஏதும் திருப்திகரமாக இல்லை.
மக்களின் விமர்சனம் காதுபடவே விழுந்தது. ராணி கவலைப்பட்டாள். அவள் மனதில் சந்தேகப் புயல் மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.
அந்த பாம்பாட்டியை நேரடியாகவே கேள்விகள் கேட்கத் தொடங்கினாள் ராணி.
“ஐயா! தாங்கள் யார்ப எங்கள் அரசராப அல்லது சித்து வித்தைகள் புரியும் யாரேனும் மகானாப என்று கேட்டாள்.
அரசி! உனக்கு உண்மைபுரிய ஆரம்பித்திருக்கிறது. இறந்து போன மன்னனுக்காக அழுது கொண்டிருந்த உங்களது துயரைப் போக்குவதற்காகவே நான்
மன் னனது உடலில் புகுந்திருக்கிறேன். என்னுடைய பெயர் பாம்பாட்டிச் சித்தன் என்றார். அரசி உண்மையை உணர்ந்தாள் கைகளைக் கூப்பி
எங்களுக்குத் தெய்வமாக வந்து உதவி செய்தீர் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.
கடைத்தேறும் வழியை உபதேசியுங்கள் என்று வேண்டினாள்.
அரசரிடமிருந்து பலப் பல தத்துவப் பாடல்கள் உபதேச மாக வந்தன. அவைகளைக் கவனமாக அனைவரும் கேட்டனர்.
அரசர் உடலிலிருந்து சித்தர் வெளியேறினார். அரசர் உடம்பு கீழே விழுந்தது.
சித்தர் உபதேசப்படி ராணி அந் நாட்டை ஆளத் தொடங்கினாள்.
அரசர் உடலில் இருந்து வெளியேறிய பாம்பாட்டிச் சித்தர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த தன் பாம்பாட்டி உடலில் புகுந்தார்.
(இவர் தவம் செய்த குகை மருதமலை யில் இருக்கிறது. இவர் மருதமலை யில் சித்திய டைந்ததாகச் சிலரும், துவாரகை யில் சித்தியடைந் ததாகச்
சிலரும், விருத்தாசலத்தில் சித்தியடைந்ததாகச் சிலரும் கூறுகின்றனர்.
மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.)
பாம்பாட்டி சித்தர்.                                   

image

Above picture is pambatti siddhar padham.it is in virudhakiriswarar temple located at virudhachalam.

Pambatti siddhar jeeva samadhi is at sankarankovil.

ABOUT KONGANAR SIDDHAR

கொங்கணவர் வாழ்க்கை வரலாறு – நிறைவு பகுதி
கொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 2
கொங்கணவர் வாழ்க்கை வரலாறு – பாகம் 1
Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
Home -> konganar siddhar history in tamil
கொங்கணவர் போகமுனிவரை எப்போது எங்கு சந்தித்தார் என்பதற்கான பாடல்கள் இல்லை. ஆனாலும் போகரைப் பற்றிக் கொங்கணவர் கூறும்போது என்னை ஈன்ற போகர் என்று பெருமிதத்தோடு தம் பாடல் ஒன்றில் கூறியுள்ளார். போக முனிவரின் சீடராகிய அவரிடம் உபதேசம் பல பெற்ற பின் அகத்தியரிடம் சிலகாலம் சீடராய் இருந்து உபதேசம் பெற்றார். போகரிடமிருந்து அனைத்தும் கற்றுணர்ந்த சித்தராய் வெளியேறிய பின் கொங்கணவரின் வாழ்வில் இரு சோதனைகள் குறுக்கிட்டன.
ஒரு நாள் ஆழ்ந்த நிஷ்டையில் கொங்கணவர் இருந்தார். அப்போது விண்ணில் பறந்து சென்ற ஒரு கொக்கு எச்சமிட, அது கொங்கணவர் மீது விழுந்தது. நிஷ்டையிலிருந்து இதனால் விடுபட்ட கொங்கணவர் சட்டென அக்கொக்கை விழித்துப் பார்க்க அடுத்த கணமே அக்கொக்கு எரிந்து சாம்பலாகிப் போனது.நீண்ட நேரம் நிஷ்டையில் இருந்தமையால் சிறிது உணவு உட்கொள்ள எண்ணிய கொங்கணவர் ஓர் வீட்டின் முன்சென்று உணவு கேட்டார். அப்போது அந்த இல்லத்தரசி தனது பதிக்கான சேவையில் இருந்தாள். தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்த பின் அவள் கொங்கணவருக்கு உணவை எடுத்துவரத் தாமதமானது. கடும்பசியுடன் இருந்த கொங்கணவர் கடுங்கோபம் கொண்டு அம்மாதை விழித்துப் பார்த்தார். ஆனால், அம்மாது சற்றும் சட்டை செய்யாது புன்முறுவலுடன்,
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று வினவினாள். அதுகேட்டதும் கொங்கணவர் வெட்கித் தலை குனிந்தார்.
கொங்கணவரின் வாத காவியம் மூன்றாவது காண்டத்தில் திருமூலருக்கும் கொங்கணவருக்கும் நடைபெற்ற தர்க்கம் பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. திருமூலர் கொங்கணவரிடம், “அன்று நீ உன் வித்தையைக் கொக்கிடம் காட்டி னாயே? அந்த வித்தை ஒரு பெண்ணிடம் பலித்ததா?” என்று கிண்டலாகக் கேட்பது போன்று அப்பாடல் அமைந்துள்ளது.
அப்பாடலில் கொங்கணவரிடம் திருமூலர்,
சபித்தாய் நீ கொக்கை அன்று
தனிக் கோபம் பெண்ணின் மேலே
எபித்தாய் நீ ஏறாதேனோ
விதமென்ன ஊணிப்பாரு
என்று கேட்பதாக அமைந்துள்ளது.
அதன் பின்னர் கொங்கணவர் தம் வழிப்பயணத்தின்போது திருமழிசை ஆழ்வாரைச் சந்தித்தார். தம்மிடம் இருந்த குளிகையை அவர் ஆழ்வாரிடம் காட்டி “இது காணி கோடியைப் பேதிக்கும்” என்றார்.
உடனே ஆழ்வார் தம் உடலில் இருந்த அழுக்கைத் திரட்டி உருட்டிக் கொங்கணவரிடம் கொடுத்து, “இது காணி கோடா கோடியைப் பேதிக்கும்” என்றார். உடனே ஆழ்வாரின் பெருமையை உணர்ந்த கொங்கணவர் அவரைப் பணிந்து வணங்கி விடைப்பெற்றுத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்.
இவ்வாறு அலைந்து திரிந்த கொங்கணவர் தம் தவவலிமையை மேலும் பெருக்கிக் கொள்ள எண்ணி ஓர் யாகம் செய்யக் கருதினார். அதற்குத் தகுதியான ஓர் இடம் தேடி அவர் காடு, மலையென அலைந்து திரிந்தார். காட்டில் ஓரிடத்தே விசாலமான பாறை ஒன்று காணப்பட்டது. அதனைக் கண்டதும் கொங்கணவருக்கு நிம்மதியுண்டானது. அப்பாறை மீது நீட்டிப்படுத்த கொங்கணவர் ஆகாயத்தைப் பார்த்தார், “அன்னையே நீதான் எனக்கு வழிகாட்டியருள வேண்டும்” என்று பராபரியான மனோன்மணி தாயை எண்ணித் தியானத்தில் ஆழ்ந்தார்.
அப்போது அவர் கண்களி்ல் விசித்திரத் தோற்றங்கல் உண்டாயின. அங்கு சேகண்டி, மத்தளம், பேரிகை முதலிய பலவித வாத்தியக் கருவிகளின் ஓசைகள் அவரது காதுகளில் விழுந்தன. அவற்றைக் கேட்டதும் கொங்கணவர் மதிமயங்கிப் போனார். அவர் எதிரே ஒரு சமாதி தெரிந்தது. உடனே கொங்கணவர் பக்திப் பரவசத்தோடு மலர்கள் பலவற்றைப் பறித்துச் சென்று அந்தச் சமாதி முன்பாகப் போட்டு கரம்கூப்பி வணங்கி நின்றார். உடனே அச்சமாதி பெருத்த ஓசையுடன் வெடித்துத் திறந்தது. அதனுள்ளிருந்த ஜோதி வடிவாய் கெளதம மகரிஷி தோன்றியருளினார்.
அவரைப் பணிந்து வணங்கிய கொங்கணவர் அவரிடம் தம் வரலாறு முழுவதையும் உரைத்து, மனோன்மணித் தாயின் பேரருளால் அவரைத் தரிசிக்கும் பேறு கிடைக்கப் பெற்றதாகவும் கூறினார். அதுகேட்டு கெளதம முனிவர் மகிழ்ந்து கொங்கணவருக்கு உபதேசம் செய்து, “மகனே… உன் விருப்பம்போல் நீ செய்யலாம்” எனவுரைத்துச் சமாதிக்கான இடத்தைக் காட்டிவிட்டுச் சென்றார்.
கெளதம முனிவர் காட்டிய அந்த இடத்தில் கொங்கணவர் சமாதியில் இறங்கினார். அப்போது மழை பெய்து சமாதியை மண் மூடியது. பருவமாறுதல்கள் எதனையும் உணராது, ஆடாமல், அசையாமல் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் சமாதியில் கொங்கணவர் இருந்து பின் வெளியே வந்தார். மீண்டும் யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகவே கொங்கணவர் அதனை உடனே துவக்கினார்.
கொங்கணவர் யாகம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென கெளதம முனிவர் அங்கு வந்தார். கொங்கணவரின் யாகத்தைக் கண்டு கோபம் கொண்ட கெளதம முனிவர். “யாகமா செய்கிறாய்? எப்படி நீ யாகம் செய்யலாம்? என்னைப் போன்று பெரும் ரிஷிகள் அல்லவா யாகம் செய்ய வேண்டும்? அதிகப்பிரசங்கித்தனமாய் நீ இந்தக் காரியத்தைச் செய்தால் பிடி சாபம்.” என்றார்.
அது கேட்டதுமே கொங்கணவர் அஞ்சி நடுங்கி, அவரைப் பணிந்து, “ஐயனே, இச்சாபத்திற்குண்டான விமோசனம் என்ன? கருணை கூர்ந்து கூறியருள வேண்டும்” என்று வேண்டினார். கொங்கணவர் நிலை கண்டு மனமிரங்கிய கெளதம முனிவர், “கொங்கணவா, நீ தில்லைவனத்துக்குச் சென்றால் உனக்குச் சாப விமோசனம் உண்டாகும்” என உரைத்தருளிவிட்டு அங்கிருந்து அகன்றார்.
அதன்படியே தில்லைவனத்தை அடைந்ததும், கொங்கணவர் தாயான மனோன்மணியைத் துதித்தபடி அங்கேயே இருந்தார். ஒரு நாள் அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, பராசர முனிவர் அங்கு வருகை தந்தார். பராசர முனிவரைக் கண்டதும் கொங்கணவர் விரைந்தோடிச் சென்று அவரைப் பணிந்து வணங்கினார். தாம் ஞான திருஷ்டியால் கொங்கணவரின் வரலாற்றை உணர்ந்த பராசர முனிவர், மனமிரங்கி கெளதம முனிவர் அளித்த சாபத்தை நிவர்த்தி செய்ததுடன் விருப்பம் போல் அவர் யாகம் செய்ய வரமும் அளித்தார். பின் கொங்கணவர் யாகத்தைச் செய்து முடித்ததும், கெளதமர் அவர்முன் மீண்டும் தோன்றி அவருக்கு உபதேடசம் செய்தருளி வாழ்த்தினார்.
மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார் கொங்கணவர். அப்போது தன்மனதில் ஏதோ ஓர் குறை இருப்பதுபோல் அவருக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. அதனால் மீண்டும் தம் குருநாதர் போகரிடம் சென்று தம் மனக்குறையைக் கூறினார்.
அதுகேட்டுப் போக முனிவர், அவரிடம், “நீ திருமாளிகைத் தேவரைச் சந்தித்து, அவரிடம் தீட்சை பெறு. உன் மனக்குறை தீரும்” என்று கூறியருளினார். உடனே கொங்கணவர் சென்று திருமாளிகைத் தேவரைச் சந்தித்தார். தம்மைச் சந்திக்க வேண்டி வந்த கொங்கணவரை எதிர்கொண்டழைத்து திருமாளிகைத்தேவர் உபசரித்தார். “இரண்டு முறை யாகம் செய்து அளவு கடந்த தவ வலிமைபெற்ற கொங்கணவரே…. தங்களது பெருமையையும் தவ வலிமையையும் உலகம் யாவும் அறியும். தாங்கள் அடியேனைக் காண வந்ததன் காரணம் யாது?” என்று வினவினார்.
அதற்கு கொங்கணவர், “குருதேவரின் கட்டளைப்படி நான் தங்களிடம் வந்தேன். குருநாதர் என்னைத் தங்களிடம் தீட்சை பெறுமாறு கட்டளையிட்டார்” என்றார். அதன்படியே கொங்கணவருக்குத் திருமாளிகைத் தேவர் இரகசிய சாதனைமுறைகள் பலவற்றை உபதேசித்து, சமய தீட்சை, நிர்வாண தீட்சை முதலியவற்றையும் அளித்தார்.
அதன்பின் ஓரிடத்தில் தங்கிய கொங்கணவர் யோக நெறியோடு வாழ்ந்தார். இவர் தமது ஐநூறுக்கும் மேற்பட்ட சீடர்களுக்கு யோக, ஞான சித்திகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டியருளினார். பின் வேங்கடவன் உறையும் திருப்பதி நோக்கி பயணமானார்.
திருத்தணிக்கு வந்து சேர்ந்த கொங்கணவர், அங்கு வீராட்டகாச மூர்த்தியின் தலை மீது குளிகையை வைத்துத் தியானம் செய்ய. மூர்த்தி அக்குளிகையைத் தமக்குள் இழுத்துக் கொண்டார். அது கண்டு கொங்கணவர் மனம் வருந்தி மீண்டும் தியானிக்கமூர்த்தி அக்குளிகையைக் கொங்கணவரிடம் திருப்பிக் கொடுத்தார். பின் திருவேங்கட மலைக்கு வந்து சேர்ந்தார். வனேந்திரன் என்ற சிற்றரசன் கொங்கணவரின் சீடனானான். அவனுக்காக அவர் எளிய பல பாடல்களைக் கூறி உபதேசித்தருளினார். பின் திருவேங்கட மலையில் யோக சமாதியில் அமர்ந்தார். இன்றும் மூலஸ்தானத்து வேங்டவந் திருவுருவச் சிலைக்குக் கீழே கொங்கணவர் யோக சமாதியில் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

18 SIDDHARS JEEVA SAMADHI

சித்தர்கள் சமாதியான இடம்
~~~~~~~~~~~~~~~~~~

                   🙏

அவர்கள் வாழ்ந்த நாட்கள்
~~~~~~~~~~~~~~~~

                  🙏

1. பதஞ்சலி சித்தர் :-
~~~~~~~~~~~~~
5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் :-
~~~~~~~~~
4 யுகம 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி :-
~~~~~~~~~
4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் :-
~~~~~~~~~
3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் :-
~~~~~~~~~~~~
1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் :-
~~~~~~~~~
880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் :-
~~~~~~~~~~~~~
800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் :-
~~~~~~~~~~~
800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர்: –
800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி :-
~~~~~~~~~~
800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் :-
~~~~~~~~~~
700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் :-
~~~~~~~~~~
700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் :-
~~~~~~~~~~
700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் :-
~~~~~~~~~~~~
600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி: –
~~~~~~~~~
300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார்: –
~~~~~~~~~
300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் :-
~~~~~~~~
300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் :-
~~~~~~~~~~~~~~
123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்…

AMAVASAI POOJAI

DSC_0228 DSC_0247 DSC_1203 DSC04268 - Copy DSC04268 DSC04269 DSC04270       

On every new moon day poojas will be conducted for Angalamman @ Angalamman simma peedam Adhagapadi.

The following poojas and activities conducted every month

1. 108 Herbal veneration poojas

2. Prithiyenkara yagam

3. mayana poojai

4. Abhishegam & Alangaram

5. Chariot ula

6.Ungal urchavam

Apart from this parihara pooja are also conducted such as nakathosam,planetary disorder etc.

Annathanam is also conducted every month.